Breaking News

அர­சி­ய­ல­மைப்பின் தீர்­வுத்­திட்ட முன்­மொ­ழிவை இம்­மாத இறு­திக்குள் சமர்ப்­பிக்க வேண்டும்!



தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இம்­மாத இறு­திக்குள் அர­சி­ய­ல­மைப்­பிற்­கான தீர்வுத் திட்ட முன்­மொ­ழிவை சமர்ப்­பித்து அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு அதனை கைய­ளிக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்தார்.

புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான தீர்­வுத்­திட்ட முன் யோச­னை­களை இம்­மாதம் 31ஆம் திகதி சமர்ப்­பிக்க வேண்­டு­மென அர­சி­ய­ல­மைப்­பிற்­கான குழு அறி­வித்­துள்­ளமை தொடர்பில் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு தொடர்­பாக கொழும்பு ஊடகம் ஒன்று வினாவியபோதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்பு குழுக் கூட்டம் 2015 ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­தலின் பின் தற்­போது 9 மாதங்கள் கடந்த சூழ்­நி­லையில் இரு தட­வைக்கு மேல் ஒரு­கி­ணைப்­புக்­குழுக் கூட்டம் நடை­பெ­ற­வில்லை.

கூட்­ட­மைப்பில் நிலவும் சர்ச்­சை­களுக்குத் தீர்வு காணக்­கூ­டிய வகையில் குறிப்­பாக இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான வேலைத்­திட்­டங்கள் நடை­பெற்று வரும் நிலையில் பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாற்­றப்­பட்­டு இம் மாதம் 31 ஆம் திகதிக்கு முன் அர­சியல் கட்­சி­களும் பொது அமைப்­பு­களும் அர­சியல் நிர்­ணய சபைக்கு யோச­னையை வழங்­க­வேண்­டு­மென இறுதித் திக­தியையும் அறிவித்துள்­ளது.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 31 ஆம் திக­திக்கு முன் தனது தீர்வுத் திட்­டத்தை முன்­வைக்­குமா இல்­லையா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

இதில் வெறு­மனே ஒரு கட்­சியை மட்டும் குறை சொல்­ல­மு­டி­யாது. நான்கு கட்­சி­களும் கூட்­டாகப் பொறுப்புக் கூற­வேண்டும். அப்­படி நான்கு கட்­சி­களும் இணைந்து ஒரு தீர்வை வழங்­கா­விட்டால் குறைந்­தது நான்கு கட்­சி­களும் தனித்­த­னி­யாக தீர்வை வழங்க வேண்டும். இது பொருத்­த­மா­னது அல்ல.

பொது­வான விட­யங்­களில் எல்­லோ­ருக்கும் உடன்­பாடு இருக்­கி­றது. வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைந்த மாநிலம். அர­சி­ய­ல­மைப்பு முறையில் சமஷ்டி இருக்­க­வேண்டும் என்ற விட­யங்கள் உள்­ள­டக்க வேண்டும்.

இது­வரை தீர்வுத்திட்ட முன்மொழிவை கூட்டமைப்பு வழங்­காதுள்ளமை பொது மக்கள் மத்­தியில் விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆகவே, இந்த விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்­டப்­பட்டு தீர்வு யோச­னையை முறைப்­படி கைய­ளிக்­க­வேண்டும். பின்னர் பேரம் பேசும்­போது தமிழ் தலை­வர்கள், முஸ்லிம் தலை­மை­க­ளு­டனும் மலையகத் தமிழ்த் தலைவர்களுடனும் ஏனையோருடனும் பேசி தீர்வுக்கான முயற்சிகளில் ஈடுபடலாம். தீர்வு யோசனையை முன்வைக்க வேண்டும். வரலாற்றில் இருந்து தவறக்கூடாது. இதனை முன்வைக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பு என்றார்.