சம்பந்தனை பழிதீர்க்கும் நித்திரை - நேற்றும்...!!(முழுவிபரம் இணைப்பு)
நாட்டை சில தினங்களாக ஆட்கொண்டிருந்த இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விவாதிப்பதற்காக, நாடாளுமன்றம் நேற்றுப் புதன்கிழமை (25) கூட்டப்பட்டு, விசேட அமர்வு நடத்தப்பட்டது.
நேற்றைய விசேட அமர்வின்போது, ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினைச் சேர்ந்தவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையிலான உறுப்பினர்கள், அவையில் பிரசன்னமாய் இருந்தனர். விசேட அமர்வான நேற்றைய தினம், செங்கோலுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய, அக்கிராசனத்துக்கு வருகைதரவில்லை. ஆகையினால், படைக்கல சேவிதர், பிரதான வாயிலின் ஊடாக செங்கோலை ஏந்தி வந்தபோது, சபாநாயகரின் வருகைதொடர்பில் அவைக்கு அறிவிப்பு விடுக்கப்படவில்லை.
செங்கோலுடன் சபாநாயகர் அவைக்கு வருகை தரும்போது, சபாநாயகரின் வருகையை படைக்கல சேவிதர், 'கரு கத்தாநாயக்கதுமா' (கௌரவ சபாநாயகர்) என்று, ஒலிவாங்கியின் ஊடாக அறிவிப்பார். அவ்வாறு அறிவிக்கப்பட்டாலும், படாவிட்டாலும் தங்களுடைய ஆசனங்களில் அமர்ந்திருக்கின்ற உறுப்பினர்கள் செங்கோலுக்கு மரியாதை செலுத்தி எழுந்து நிற்பர். எனினும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியுமான இரா.சம்பந்தன், செங்கோலை நேற்றைய தினம் எடுத்து வரும்போது எழுந்து நிற்கவில்லை.
செங்கோலை படைக்கல சேவிதர், செங்கோல் பீடத்தில் வைக்கும்போது 'டொக்' என்று சத்தம் கேட்டது. அச்சத்தத்தைக் கேட்டு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், எழுந்து மரியாதை செலுத்திவிட்டு அமர்ந்துகொண்டார்.