கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிகழ்வுகளை முப்படையினர் புறக்கணிக்கத் தீர்மானம்
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் பங்கேற்கும் நிகழ்வுகளை புறக்கணிப்பதற்கு முப்படையினரும் தீர்மானித்துள்ளனர்.
அண்மையில் சம்பூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை உயர் அதிகாரி ஒருவரை முதலமைச்சர் கடுமையாக திட்டியிருந்தார்.இந்த சம்பவத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிகழ்வுகளை முழுமையாக முப்படையினரும் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.
இனி வரும் காலங்களில் முப்படையினரதும் முகாம்களுக்குள் பிரவேசிப்பதற்கு முதலமைச்சருக்கு அனுமதியளிக்கப்படாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். எந்தவொரு சூழ்நிலையிலும் படை அதிகாரியொருவரை பகிரங்கமாக திட்டுவதற்கு அனுமதிக்க முடியாது எனவும் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர்இ கடற்படை அதிகாரியை திட்டிய சம்பவம் குறித்த அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன்படி கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கும் எந்தவொரு நிகழ்விலும் படையினர் பங்கேற்க மாட்டார்கள் என்பதுடன்இ படை முகாம்களுக்குள் பிரவேசிக்கவும் முதலமைச்சருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.