Breaking News

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்



காலநிலை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள்அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர் சிறுமியர் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வித பதிவுகளும் இன்றி சிறுவர் சிறுமியர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்சிறுமியரின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளார்.