Breaking News

தமிழ் மக்களுக்கான தீர்வை மறுத்தால் மீண்டும் அழிவை எதிர்நோக்க நேரிடும்: சிவாஜிலிங்கம்



தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப் பட்டுவார்களானால் மீண்டும் ஒருமுறை போராட்டம் வெடிப்பதை எவராலும் தடுக்க முடியாது போய்விடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார்.

இதனால் நாட்டை பிளவுபடுத்தாது ஐக்கிய இலங்கைக்குள் தீரவுகாண்பதற்கு தமிழ் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனைனைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு காண கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தை சிறிலங்கா அரசாங்கமும் தென்பகுதி சிங்கள கட்சிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

வடமாகாண சபையின் அரசியல் தீர்வு திட்ட முன்வரைபின் பிரதிகளை நேற்று ஊடகவியலாளர்களிடம் கையளித்த போதே சிவாஜிலிங்கம் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டம் அடங்கிய பிரதிகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

வடமாகாண சபையின் அரசியல் தீர்வு திட்ட வரைபு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் கடந்த சனிக்கிழமை கையளிக்கப்பட்ட நிலையிலேயே, ஊடகவியலாளர்களுக்கு அது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இன்ற அதன் பிரதிகள் கையளிக்கப்பட்டுள்ளன.