Breaking News

ரெலோ அமைப்பின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகமொன்று இரத்தினபுரத்தில் திறந்து வைப்பு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ ) கிளிநொச்சி பிராந்திய அலுவலகமொன்று இரத்தினபுரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கல நாதன் அவர்களின் இணைப்புச் செயலாளர் பொன் காந்தன் தலைமையில் கிளி. இரத்தினபுரத்தில் அமைந்துள்ள புதிய அலுவலக முன்றலில் (21.05.2016) அன்று மாலை நடந்த இந் நிகழ்வில், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நாடாவை வெட்டி புதிய அலுவலகத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரச்சார செயலரும் சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவருமான கணேஸ்வரன் வேலாயுதம், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினரும் பிரான்ஸ் நாட்டிற்கான பிரதிநிதியுமான நித்தி மற்றும் கல்வியலாளர்கள், கவிஞர்கள் சமூகவாதிகள், முன்னாள் போராளிகளோடு பெருந். திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, விசேட தேவையுடைய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.