படையினரின் ஏற்பாட்டில் யாழ். முற்றவெளிப் பகுதியில் வெசாக் பண்டிகை
படையினரின் ஏற்பாட்டில் யாழ். முற்றவெளிப் பகுதியில் இடம்பெறும் வெசாக் பண்டிகையினை நேற்றைய தினம் இந்தியத் துணைத்தூதுவர் , மாவட்ட அரச அதிபர் , மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
குறித்த நிகழ்வுகள் யாழ் மணிக்கூட்டு வீதி , நூலகம் அருகாமை , போன்ற பிரதேசங்களில் பாரிய அளவில் அமைக்கப்பட்ட வெசாக்கூடுகள் என்பனவும் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது
மேற்படி நிகழ்வுகள் பௌத்த மதகுருக்களின் பிரித் ஓதலுடன் ஆரம்பமானது. இந் நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள் , ஆளுநர் , மக்களுடன் பெருமளவான படையினரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை தென்பகுதியில் ஏற்பட்ட பாரிய இயற்கை அணர்த்தம் காரணமாக வெசாக் கொண்டாட்டங்கள் பல நிறுத்தப்பட்டபோதிலும் வடக்கில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.