Breaking News

பனாமா ஆவண கசிவில் இலங்கையர்கள்! கண்டுகொள்ளாத நல்லாட்சி அரசாங்கம்!

அண்மையில் வெளியான பனாமா ஆவண கசிவின் காரணமாக உலக நாடுகளிலுள்ள பல செல்வந்தர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த ஆவண கசிவின் ஊடாக இலங்யைச் சேர்ந்த 67 பேரின் விபரங்களும் வெளியிடப்பட்டது.


இதனை அடிப்படையாக கொண்டு அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், இதுவரையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

பனாமா பேப்பர்ஸ் ஊடாக வெளியாகிய ராஜபக்சர்களின் பணத்தில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நந்தன ஜயதேவ லொக்குவித்தானவிடம் இருந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்த போதிலும், இதுவரையில் அவர் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படவில்லை.

நந்தன ஜயதேவ லொக்குவித்தானவினால் டுபாய் மெரியட் ஹோட்டல் கொள்வனவு செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்தமையின் காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டது.

2005 – 2010 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிப்படையாக உருவான முதலீட்டாளர் என அப்போதைய காலப்பகுதியில் பிரபலமடைந்த நந்தன ஜயதேவ லொக்குவித்தானவின், நிலோமா பெஷன் லிமிட்டட் நிறுவனத்தின் பெயர் பனாமா பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது சீஷேல்ஸ் பட்டியலின் கீழ் பெயரிடப்பட்டுள்ளது.

நந்தன ஜயதேவ, உலக புகழ் பெற்ற டுபாய் மெரியட் ஹோட்டல் மற்றும் இலங்கையிலுள்ள இரும்பு சார்ந்த நிறுவனம் ஒன்றின் உரிமையாளராகும்.

டுபாய், அஜ்மான் பிரதேசத்தில் நிறுவனம் ஒன்றின் தயாரிப்பு உதவியாளராக செயற்பட்ட ஒருவர் மிகவும் குறுகிய காலப்பகுதியினுள் 5 நட்சத்திர ஹோட்டல் மற்றும் இலங்கையில் நிறுவனம் ஒன்றை கொள்வனவு செய்யததன் மூலம், எவ்வளவு கறுப்பு பணமாக நாட்டை விட்டு வெறியேற்றப்பட்டிருக்கும் என்பதனை கண்பிடிக்கப்பட வேண்டும்.

இதற்கு மேலதிகமாக பெலன்டைன் குரூப் லிமிட்டெட் என்ற பெயர் ஓப்ஷோ நிறுவனத்தின் ஊடாக ஐக்கிய ராஜ்ஜிய பட்டியலில் இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகரான சேன யந்தேஹிகேவின் பெயரும் பனாமா பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்சர்களுக்கு சார்பான செய்திகளை வெளியிடுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை ஒன்றின் ஆரம்ப உரிமையாளரும் ஆர்ப்பிக்கோ நிறுவனத்தின் உரிமையாளரும் அவராகும்.

அத்துடன் இந்த வகையில் தவறான முறையில் சொத்துக்கள் சேகரித்தமை மற்றும் பணம் தூய்மையாக்கல் நடவடிக்கைகளுக்கு தலையிட்டமை ஊடாக மிகவும் குறுகிய காலப்பகுதியில் கோடீஸ்வரர்களாகிய பலர் தொடர்பில் தற்போது வெளியாகவுள்ளமையை தடுப்பதற்காக ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள பல்வேறு வகையில் இந்த நபர்களினால் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.