Breaking News

இமயமலையின் உச்சத்தைத் தொட்ட இலங்கையின் முதல்பெண்!



உலகிலே மிகவும் உயரமான மலையான இமயமலையின் உச்சத்தைத் தொட்ட முதல் இலங்கைப் பெண் என்ற சாதனையை ஜெயந்தி குருஉதும்பல நிலைநாட்டியுள்ளார். இன்று காலை (சனிக்கிழமை) இவர் இமயமலையின் உச்சத்தைத் தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் இலங்கைப் பெண்ணாக இவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

அத்துடன் ஜெயந்தி குருஉதும்பலவுடன் சேர்ந்து இமய மலை ஏறுவதற்கு சென்ற யோஹான் பீரிஸ் இறுதி கட்டம் வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இமயமலையின் உச்சத்தை எட்டுவதற்கு முன்னர் இமயமலையின் உச்சத்தை அண்மித்த பகுதிகளில் பயிற்சிகளில் ஈடுபட்டு, இந்தச் சவால் நிறைந்த பயணத்தை முடித்துள்ளனர்.

இமயமலையானது உலகிலேயே மிகப் பெரிய மலை என்பதுடன், கடல் மட்டத்திலிருந்து 29ஆயிரத்து 29அடி உயரமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர்கள் இருவருக்கும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இனிவரும் காலங்களில் சாதனையை நிலைநாட்ட இருப்பவர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.