Breaking News

ஆளுநர் தலைமையில் குற்றச் செயல்கள் தொடர்பில் விசேட கூட்டம்



யாழில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் தலமையில் நேற்றைய தினம் ஓர் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் குடாநாட்டின் பொலிசார் மற்றும் மாகாணசபைப் பிரதிநிதிகள் , சிவில் சமூகப் பிரதிநிதிகள் மாவட்ட அரச அதிபர் என 30 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



குறித்த சந்திப்பில் யாழ் . குடாநாட்டில் இடம்பெறும் குற்றச் செயலைக் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் , அதற்கு கூட்டாக மேற்கொள்ளிம் வழிமுறைகள் தொடர்பில் கூடி ஆராய்ந்த்தோடு அதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் முனிவெடுக்கப்பட்டது.

இதற்காக உடனடியாக பொலிசார் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் , தமிழ் தெரிந்த பொலிசாரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதுடன் போலிசாருக்கான விண்ணப்பமும் கோருவது. உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.