Breaking News

நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டமைப்பினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ணசிங்கம், சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் மெழுகுவர்த்தி ஏற்றி உறவுகளை அஞ்சலித்தனர்.