பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஐ.நா தயார்
ஸ்ரீலங்காவில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் மீட்பு பணிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பினை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஐ.நாவின் ஸ்ரீலங்கா அலுவலக ஒருங்கிணைப்பாளர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான செய்திகள் தமக்கு கவலையளிப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்கு ஐ.நா ஸ்ரீலங்காவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.