'ரோணு' சூறாவளி தாக்கத்தால் அடைமழை தொடரும் அபாயம்!..கடும் காற்றும் வீசுமாம்!
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்க நிலைமை சூறாவளியாக உருவெடுத்துள்ளது. ' ரோணு' என இந்த சூறாவளிக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த சூறாவளியானது காங்கேசன்துறையில் இருந்து வடக்கு நோக்கி 600 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது.
இதன் காரணமாக இலங்கையின் தென் மேற்குப் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய அடைமழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. இந்த அடைமழையானது அடுத்து வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தாழமுக்கப் பகுதியைநோக்கிகாற்று இழுக்கப்படுவதன் விழைவாகவே இவ்வாறு அடை மழை பெய்யும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் கால நிலை அவதான நிலையம் குறிப்பிட்டது.
அத்துடன் இலங்கையின் தென் மேற்கு பகுதியில் பெய்யும் மழையானது குறிப்பாக 100 மில்லி மீற்றர்கள் முதல் 150 மில்லி மீற்றர்கள் வரை இருக்கும் என அந்த நிலையம் குறிப்பிடுகிறது.
எவ்வாறாயினும் இலங்கையின் வடமேற்கு,மேற்கு,மத்திய மற்றும் சப்ரகமுவமாகாணங்களிலும், காலி,மாத்தறைமாவட்டங்களிலும் மழையோஅல்லது இடியுடகூடிய மழையோ அவ்வப்போது பெய்யும் அறிகுறி உள்ளது.
அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டைமாவட்டங்களிலும் ஏனைய சிலபிராந்தியங்களிலும் பிற்பகல் வேளையில் மழையோஅல்லது இடியுடன் கூடியமழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இடியுடன் கூடியமழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்தகாற்று வீசக்கூடும் என சுட்டிக்காட்டும் கால நிலை அவதான நிலையம் மின்னலினால் ஏற்படும் இழப்புக்களை குறைப்பதற்காக பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.