தனக்கான கடமைகளை அறிந்து கொண்டு வடக்கு ஆளுநர் செயற்பட வேண்டும்!
வடமாகாண ஆளுநர் தனக்கான கடப்பாடுகள் எவை என்பதை அறிந்து கொண்டு செயற்பட்டால்மிகவும் நல்லது என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ் பொது நூலகத்தில் இடமபெற்ற வடக்கு மீனவ பிரதிநிதிகளுடனானசந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த போது ஆளுனர் தொடர்பில்ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுனர் சில விடயங்களை செயற்பாடுத்துவதும் அதனை நோக்கும் விதமும்வித்தியசம் இருப்பது நான் ஏற்றுகொள்கிறேன். அவர் இப்பதவிக்கு முன்பு அரசியல்வாதியாகவும் தென் மாகாண ஆளுனராகவும் இருந்தவர்.அந்த வகையில் தற்போது அவர் அனைத்து விடயங்களையும் அரசியலாக பார்க்கிறார்.
இதற்கு முன் இருந்த ஆளுநர் பள்ளிகஹார ஒரு அரச அதிகாரியாக செயல்பாடடுஅதிகாரிக்குரிய செல்பாட்டை அனைத்து விடையத்திலும் செயதார்.
ஆகவே இது தொடர்பில் ஆளுநரை குறை சொல்வதில் பயனேதும் இல்லை. நமக்கும்ஆளுனருக்கும் இடையில் சரியான ஒரு புரிந்துணர்வு ஏற்படவேண்டும். அந்தபுரிந்துணர்வு விரைவில் ஏற்படும் அதுவே எவ்வகையில் என்பது பற்றி தற்போது கூறதெரியவில்லை என்றார்.