Breaking News

அரநாயக்கவில் மீண்டும் மண்சரிவு! : மீட்புப் பணிகள் இடைநிறுத்தம் (2ஆம் இணைப்பு)



கேகாலை – அரநாயக்க பிரதேசத்தில் இன்று காலை முதல் மீண்டும் பலத்த மழை பெய்துவருவதால், அங்குள்ள சம்சாரகந்த எனும் மலைப்பகுதியில் மீண்டும் சரிவு ஏற்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், மீட்புப் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் ஏற்கனவே ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, இன்னும் 120இற்கும் அதிகமானோர் மண்ணில் புதையுண்டிருக்கலாமென மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.