Breaking News

வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்: ஜெயலலிதா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முன்னிலை வகிக்கின்றது.

திராவிட முன்னேற்றகழகம் இரண்டாவது இடத்திலுள்ள அதேவேளை பாட்டாளி மக்கள் கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் மே மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்றது.

அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதேவேளை வெற்றிக்கு உழைத்த அனைத்து மக்களிற்கும் ஜெயலலிதா நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் தலைமைச்செயலகம் முன்னால் ஒன்றுதிரண்டு வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகளவு பணம் இலஞ்சம் வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளிற்கான தேர்தல் 23 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

ஏனைய 232 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 65 ஆயிரத்து 486 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.