Breaking News

விமானத்தை கண்டுபிடிக்க ஐரோப்பிய கடற்பரப்பில் தேடுதல் வேட்டை



ஐரோப்பிய வான் பரப்பில் காணாமல்போன ஈஜிப்ட் எயார் விமானம் கடலில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கிறீஸ் மற்றும் எகிப்திய கப்பல்கள் கூட்டிணைந்து மெடிடேரியன் கடற்பரப்பில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

காணாமல்போன எம்.எஸ். 804 ரக விமானம் தொடர்பான புதிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று எகிப்திய பிரதமர் ஷெரிப் இஸ்மாயில் கெய்ரோ விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.மொஹமட் ஷோகிர் என்பவரே இந்த விமானத்தின் விமானி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர் 6 ஆயிரம் மணித்தியால விமானப் பயணம் அனுபவம் பெற்றவர் என்றும் கூறப்பட்டுள்ளது.