ஈழப்போரில் உயிர் இழந்த உறவுகளுக்கு இந்துவின் மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் இன்று மதியம் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்
முள்ளிவாய்க்கால் அவலம் நிறைவேறி ஏழு வருடங்கள் கழிந்தாலும் அதன் வடுக்களில் இருந்து எம்மாலும் எம் இளைய சந்ததியாலும் வெளிவர முடியவில்லை.
கடந்த காலங்களில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செழுத்துவதற்கு இறுக்கமான கட்டுபாடுகள் காணப்பட்டது. ஆனால் இன்றைய தினம் பெருந்திரளான மக்கள் முள்ளிவாய்க்கால் சென்று இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் மாணவர்களால் இறந்த உயிர்களை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் மற்றும் பந்தங்கள் ஏற்றப்பட்டன.
இதன் மூலம் எமது இளம் சமுதாயம் தாயகத்தின் மீதும் தமது சொந்தங்கள் மீதும் மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துக் காட்டி இருக்கிறது.