வாகரையில் முள்ளிவாய்க்கால் நினைவு அனுஸ்டிப்பு! (படங்கள் இணைப்பு)
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் மாணிக்கபுரம் ஆற்றங்கரையோரத்தில் மே முள்ளிவாய்க்காலில் தமிழ் தேசத்தின் போரால் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தி பிரார்த்தனை நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், திருகோணமலை மாவட்ட செயலாளர் கணேசப்பிள்ளை குகன், அம்பாறை மாவட்டத்திற்காக உப தலைவர் முருகேசு வரதராஜன், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பூசைகள் இடம்பெற்றதுடன், ஈகச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவனர் சூழ்ந்திருந்தமையால் மக்களின் வருகை குறைவாகவே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.