Breaking News

மதிமுக சார்பில் முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் பொதுக்கூட்டம்



சென்னை ஜாபர்கான்பேட்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இன்று மே 17 ஆம் தேதி முள்ளி வாய்க்கால் படுகொலையில் உயிர் ஈந்தவர்களுக்கு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஜாபர்கான்பேட்டையில் (காசி தியேட்டர் அருகில்) கடும் மழையினுக்கிடையே நடைபெற்ற இந்த நினைவேந்தல் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளார் வைகோ எழுச்சியுரை ஆற்றியுள்ளார்.

விடுதலை புலிகள் அளப்பரிய தியாகம் செய்தும் போரில் வீழ்ச்சியடைய தமிழர்களிடம் ஒற்றுமையின்மையே காரணம் என்றார். இனி தமிழர்கள் நாம் ஒன்றுபட்டால் மட்டுமே சுதந்திர தமிழீழம் சாத்தியம் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தொல்.திருமாவளவன், வீர சந்தானம், நாகை திருவள்ளுவன், புகழேந்தி தங்கராஜ், வீர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு முள்ளி வாய்க்கால் படுகொலையில் உயிர் ஈந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.