Breaking News

ஈழத்தமிழ் மக்களை நினைவுகூர்ந்து டென்மார்க் தேவாலயத்தில் அஞ்சலி (படங்கள் இணைப்பு)



சிங்களப் படைகளால் காட்டுமிராண்டித்தனமாக கொன்றொழிக்கப்பட்ட அப்பாவி ஈழத்தமிழ் மக்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு டென்மார்க் Grindsted என்ற இடத்தில் இடம்பெற்றது. 

Grindsted நகர தேவாலயத்தில் Billund நகரசபை வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஆத்மசாந்தி பிராத்தனை நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 

அருட்தந்தை Steen Søvndahll இன் உருக்கமான பூசையுடன் தேவாலயத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் உயிர் நீத்த வீர மறவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தீபங்கள் ஏற்றி மலர்கள் தூவி அஞ்சலிக்கப்பட்டதோடு இளைஞர்களால் விசேட உரைகள் நிகழ்த்தப்பட்டன.