கெடுபிடிகளுக்கு மத்தியில் கிழக்கு பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
தாயகத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 7வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு பல்கலைகழக கலை, கலாசார மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் நடைபெற்றது.
இதன்போது உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி ஈகச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மூவின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில், இந்த நிகழ்வில் தமிழ் மாணவர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தனர்.
புலனாய்வுத்துறையினர் மற்றும் ஏனையவர்களின் கெடுபிடிகள் அதிகம் காணப்பட்ட போதிலும், நினைவேந்தல் நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் அமைதியாக உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனைகள் நடைபெற்று நிறைவடைந்தது.