பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் உறுதியளிக்கவில்லை!
ஸ்ரீலங்கா விஜயத்தின்போது அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாக தங்களிடம் உறுதியளிக்கவில்லை என சித்திரவதைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விஷேட அறிக்கையாளர் யுவான் ஈ மென்டஸ் தெரிவித்துள்ளார்.
வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்துள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றபோதிலும் அரசின் இந்த முடிவு குறித்த புதிய தகவல்கள் எவையும் தமக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் பொதுவான கரிசணை காணப்படுகின்றது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சில உயர் அதிகாரிகள் கவலை வெளியிட்டனர்.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட வேளை தங்களால் ஜனாதிபதியையோ அல்லது பிரதமரையோ சந்திக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டார். எனினும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் தங்களிடம் உறுதி வழங்கவில்லை என யுவான் ஈ மென்டஸ் தெரிவித்துள்ளார்.ய