இங்கிலாந்து அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சம்பியன்
T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து அணியை 4 விக்கெட்களால் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்திக் கொண்டது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அதனைத் தொடர்ந்து 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்களைப் பெற்று வெடியீட்டியது.
அதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது தடவையாகவும் T20 உலகக்கிண்ணத்தை தனதாக்கிகொண்டது.மார்லன் சாமுவேல்ஸ் 66 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களையும், கார்லோஸ் பிறாத்வெய்ட் 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றுகொண்டனர்.
கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டன. மேற்கிந்திய அணிக்கு 4 விக்கெட்கள் கைவசமிருந்தன. பென் ஸ்ட்ரோக் வீசிய இறுதி ஓவரின் முதல் 4 பந்துகளில் 4 சிக்ஸர்களை விளாசிய கார்லோஸ் பிறாத்வெய்ட் வெற்றியை தனது நாட்டு பெற்றுகொடுத்தார்.
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக மார்லன் சாமுவேல்ஸ் தெரிவானார். சுற்றுப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய வீரர் விராத் கோஹ்லி தெரிவானார்.