துறைமுக நகரத் திட்டம்: 70 நிபந்தனைகளுக்கு சீன நிறுவனம் இணக்கம்
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக கடலோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தினால், பரிந்துரைக்கப்பட்ட 70 நிபந்தனைகளுக்கு, அந்த திட்டத்தைச் செயற்படுத்தும், சீன நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடுமையான சுற்றுச்சூழல் நிபந்தனைகளின் கீழ், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு, சீன நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, 46 ஆயிரம் சதுர மீற்றர் பிரதேசம் ஆட்கள் நுழைவதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புவிநிலைகாட்டி (ஜிபிஎஸ்) கருவிகளின் உதவியுடன் இந்தப் பகுதி கண்காணிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன