Breaking News

சாவகச்சேரி சம்பவம் - மஹிந்த பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும்



சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்ற விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றத்துக்கு வந்து தெரிவிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே பிரதமர் ரணில் விக்கரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், மஹிந்த ராஜபக்ஷ் , பாதுகாப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் கருத்துரைத்தால், அது தொடர்பில் விவாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.