இலங்கை- சீனா இடையே ஏழு உடன்பாடுகள் கைச்சாத்து
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் நேற்று ஏழு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இலங்கை பிரதமருக்கும், சீனப் பிரதமருக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, அவர்களின் முன்னிலையில் இந்த உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.
கைதிகளை ஒப்படைப்பது தொடர்பான இரு தரப்பு உடன்பாடு சீன வர்த்தக அமைச்சுக்கும், இலங்கையின் மூலோபாய அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு உடன்பாடு, இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு நடமாடும் சிறுநீரகப் பரிசோதனை திட்ட உடன்பாடு, சீன அபிவிருத்தி வங்கிக்கும்,இலங்கை மத்திய வங்கிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாடு, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி குறித்த உடன்பாடு, இரண்டு நாடுகளின் தேசிய விஞ்ஞான நிறுவகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்பாடு ஆகியனவே கையெழுத்திடப்பட்டுள்ளன.
எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான உடன்பாடுகள் ஏதும் செய்து கொள்ளப்படவில்லை.