ஐ.நா அதிகாரிகளுடன் போர்க்குற்ற விவகார அமெரிக்க நிபுணர் பேச்சு
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், நேற்று கொழும்பிலுள்ள ஐ.நா அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கொழும்பிலுள்ள ஐ.நா வதிவிட இணைப்பாளர் உனா மக் கோலியையும், இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் ஏனைய பிரதிநிதிகளையும், ரொட் புச்வால்ட் சந்தித்துப் பேசினார்.
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் குறித்தே அவர் கலந்துரையாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.