Breaking News

தமிழ் ஊடகங்களிற்கு பற்றிக் சொன்ன அதிர்ச்சிச் செய்தி!


கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்காபரோவில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்து கொண்ட திரு.பற்றிக் பிறவுன் அவர்கள் தெரிவித்த கருத்தொன்று கனடாவிலுள்ள தமிழ் ஊடகவியலாளர்களை சில விடயங்களை ஆராய வைத்துள்ளது.

கனடாவில் சுமார் 38க்கும் மேற்பட்ட தமிழ் ஊடகங்கள் உள்ளன. குறிப்பாக 95 வீத ஊடகங்களும் ரொறன்ரோவை மையமாகக் கொண்டே தங்களது பணிகளை ஆற்றி வருகின்றன. இந்த நிலையில் திரு. பற்றிக் பிறவுன் அவர்கள் தமிழ் ஊடகவியலாளர்களை நோக்கி மேற்படி விழாவில் வைத்து ஒரு விடயத்தை தெளிவாக்கினார்.

வருடாந்தம் பல்லின ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்காக என்றே 20 மில்லியன் டொலர்களை லிபரல் அரசு கடந்த பல வருடங்களாக ஒதுக்கி அதனை செலவளித்து வருகின்றது. நீங்கள் தமிழ் ஊடகங்கள் பாரிய அளவில் பணியாற்றி வருகின்றீர்கள். உங்களில் எத்தனை பேருக்கு அத்தகைய விளம்பரங்கள் தரப்பட்டன என்ற கேள்வியை கேட்டார்,

அதற்கான பதிலையும் திரு.பற்றிக் பிறவுனே கூறினார். எனக்குத் தெரியும் உங்களிற்கு ஒருசத வீதம் கூடத் தரப்படவில்லை. வருடாந்தம் 20 மில்லியன் டொலர்களத் ($20,000,000.00) செலவளித்த லிபரல் அரசு தமிழ் ஊடகங்களிற்கு ஒன்றையும் தரவில்லை என்று தெரிவித்த திரு.பற்றிக் பிறவுன் அவர்கள் ஒரு உறுதிமொழியையும் வழங்கினார்.

தான் ஆட்சிக்கு வந்ததும் விகிதசார அடிப்படையில் சகல இன ஊடகங்களிற்கு விளம்பரங்களை பகிர்ந்தளிப்பேன் எனவும் தமிழ் ஊடகங்கள் நிச்சயமாக இந்த அரச விளம்பரங்களை மக்களின் கவணத்திற்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கத் தான் வழி செய்வேன் என்றும் தெரிவித்த திரு பற்றிக் பிறவுன் அவர்கள்,

நான் இப்போது இந்தக் கருத்தைத் தெரிவித்தால் நாளையே லிபரல் அரசு முண்டியடித்துக் கொண்டு உங்களிற்கு விளம்பரம் தர முன்வரலாம். மக்களிற்கு கருத்துத் தெரிவிக்கும் எந்த விளம்பரங்களையும் கொண்டு செல்லும் நீங்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களையும் தவறவிடக் கூடாது என்றார்.

இது குறித்துக் கருத்தெரிவித்த தமிழ் ஊடகவியலாளர் ஒருவர், “ஒரு அரசியல்வாதி எமது இனத்திற்காக கனடாவில் காத்திரமாகப் பங்காற்றினார் என்றால் அது பற்றிக் பிறவுன் என்ற கருத்தை என் வாழ்நாள் முழுவதும் பிரதிபலிப்பேன்”மற்றைய பக்கமாக இவ்வளவு நேர்மையாகக் கதைக்கக்கூடிய சொன்னதைச் செய்யும் ஒரு மானிடனை சந்திப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.