Breaking News

வடமாகாண ஆளுநர் முல்லைத்தீவிற்கு விஜயம்

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்டத்துக்கு உட்பட்ட அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆளுநர், மாவட்டத்துக்குட்பட்ட பல பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.