Breaking News

தேசிய அரசாங்கத்திற்கு ஒருபோதும் ஆபத்தில்லை!

புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக தமிழ் பேசும் மக்­க­ளுக்கு தீர்வுத் திட்­ட மொன்றை முன்­வைக்கும் விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இரு தரப்பு பேச்­சு­வார்த்­தை­களை அர­சாங்கம் நடத்தும். ஏனைய கட்­சி­க­ளு­டனும் நாம் இந்த விடயம் தொடர்பில் பேச்சு நடத்­தி­னாலும் கூட்­ட­மைப்­பு­ட­னான பேச்­சு­வார்த்­தை­களே மிகவும் முக்­கி­ய­மா­ன­வை­யாகும் என்று நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

இதே­வேளை ஒரு­சில அமைச்­சர்கள் பிர­த­மரை விமர்­சித்­தனர் என்ற கார­ணத்­திற்­காக தேசிய அர­சாங்­கத்­திற்கு எந்த பாதிப்பும் ஏற்­ப­டாது. தேசிய அர­சாங்கம் 5 வரு­டங்கள் நாட்டை ஆட்சி செய்யும் என்­ப­துடன் நிலு­வையில் காணப்­ப­டு­கின்ற பிரச் சி­னை­களை தீர்த்து வைக்கும் என் றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா பிர­த­மரைவிமர்­சித்­துள்­ளமை மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பின் அர­சியல் தீர்வு உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்­ளமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்ஷ இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஒரு அமைச்சர் கடு­மை­யாக விமர்­சித்­து­விட்டார் என்­ப­தற்­காக தேசிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் வீழ்ச்­சி­ய­டை­யாது. ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு தேசிய அர­சாங்­கத்தை கொண்டு செல்­லவே முன்­வந்­துள்­ளன. ஆனால் ஐந்து வரு­டங்­க­ளுக்கு நாங்கள் தேசிய அர­சாங்­கத்தை கொண்டு செல்வோம்.

அது­மட்­டு­மன்றி தீர்க்­கப்­ப­டாமல் இருக்­கின்ற பிரச்­சி­னை­க­ளையும் எமது தேசிய அர­சாங்­கத்தின் கீழ் தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்போம். அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டாலும், நாட்டில் இன்னும் ஜனா­தி­பதி முறை­மையே காணப்­ப­டு­கின்­றது. அந்த வகையில் பிர­தமர் ரணில்­விக்­கி­ரம சிங்­கவும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் மிகவும் புரிந்­து­னர்­வு­டனும், ஒத்­து­ழைப்­பு­டனும் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

எனவே ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்லும். இந்த தேசிய அர­சாங்­கத்தை குழப்­பு­வ­தற்கு இடை­யூ­று­களும் முட்­டுக்­கட்­டை­களும் வரலாம். ஆனால் அந்த சவால்­களை முறை­ய­டித்து நாங்கள் தேசிய அர­சாங்­கத்தை முன்­கொண்டு செல்வோம். இந்த தேசிய அர­சாங்­கத்தை ஐந்து வரு­டங்­க­ளுக்கு யாராலும் அசைக்க முடி­யாது.

தேசிய அர­சாங்­கத்தை அசைப்­ப­தற்கு பல்­வேறு தரப்­புக்கள் முயற்­சிக்­கலாம். ஆனால் நாங்கள் அதற்கு இட­ம­ளிக்க மாட்டோம். சவால்­களை எதிர்­கொண்டு ஐந்து வரு­டங்­க­ளுக்கு அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்வோம். இதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம்.

இது இவ்­வா­றி­ருக்க புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வுத் திட்­ட­மொன்றை முன்­வைக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. அந்த வகையில் அர­சியல் தீர்­வுத்­திட்­ட­மொன்றை முன்­னெ­டுக்க அனைத்து அர­சியல் கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­துவோம்.

ஆனால் அர­சியல் தீர்வு விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இரு தரப்பு பேச்­சு­வார்த்­தை­களை அர­சாங்கம் நடத்தும். ஏனைய கட்­சி­க­ளு­டனும் நாம் இந்த விடயம் தொடர்பில் பேச்சு நடத்­தி­னாலும் கூட்­ட­மைப்­பு­ட­னான பேச்­சு­வார்த்­தை­களே மிகவும் முக்­கி­ய­மா­ன­வை­க­யாகும். காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் பிரதானமான கட்சியாகும்.

எனவே இந்த தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவது மிகவும் அவசியமாகும். எனவே விரைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் இரு தரப்பு பேச்சுக்களை நடத்துவோம் என்றார்.