கொழும்புக்கு போகவேண்டாம்!- ரஹ்மான் வீட்டுக்கு முன் குவியும் பல முக்கியஸ்தார்கள்
“வெள்ளைப் பூக்கள்” என்று இரு நிகழ்ச்சி இலங்கையில் நடைபெறவுள்ளது. இதில் மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொள்ள இருக்கிறார். இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த இன் நிகழ்ச்சி நடைபெறுவதாக எவரோ, மண்டையைக் கழுவி ரஹ்மான் அவர்களை சம்மதிக்க வைத்துவிட்டார்கள்.
ஆனால் தற்போது தமிழ் நாட்டில் , அதற்கு பாரதூரமான எதிர்வு கிளம்பியுள்ளது. வெள்ளைப் பூக்கள் என்று நிகழ்ச்சியை நடத்தி , சிங்களம் மற்றைய இனங்களோடு தாம் சேர்ந்து வாழ விரும்புவதாக காட்டிக் கொள்ள நினைக்கிறதே… வெள்ளைக் கொடியோடு சென்ற நபர்களை கொடூரமாக கொலைசெய்தார்களே அதற்கு நீதியான விசாரணை வேண்டாமா ?
பாலகன் பால்ச்சந்திரனை துடிக்க துடிக்க , நெஞ்சில் 5 தடவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்களே … அதற்கான விசாரணை நடந்து முடிந்ததா ? இல்லையே இப்படி இலங்கையில் கொல்லப்பட்ட எந்த ஒரு தமிழனுக்கும் இதுவரை நீதியான வீசாரணை நடைபெறவில்லை. இன் நிலையில் அனைத்தையும் பூசி மெழுக இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் என்ற நாடகத்தை கையில் எடுத்துள்ளது சிங்கள அரசு. இதற்கு ரஹ்மானும் துணை போனால் , அவரை மாண்டுபோன ஈழத் தமிழர்களின் ஆண்மாக்கள் என்றுமே மன்னிக்கப்போவது இல்லை.