மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கம்
மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி போர் ஆரம்பித்த நாள் முதல் இதுவரையில் மஹிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த கேணல் மகேந்திர பெர்னாண்டோ உள்ளிட்ட படையினரை அகற்றிக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் குழுவில் 89 இராணுவப் படையினரும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களில் அதிகமானவர்கள் கொமாண்டோ படையினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.