Breaking News

மன்னாரில் அதிசய சிறுவன்

மன்னாரில் சிறுவன் ஒருவனுக்கு இதயம் வலது பக்கத்தில் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லோர்pக்கும் இடது பக்கமே இதயம் இருக்கும். ஆனால் மூன்றரை வயது நிரம்பிய அன்றியோனோ என்ன மன்னார் எமில் நகரைச் சேர்ந்த சிறுவனுக்கு இதயம் வலது பக்கத்தில் உள்ளது.

ஆயினும் அன்றியோனோ ஏனைய சிறுவர்களைப் போலவே சாதாரணமாக அனைத்து விடயங்களையும் செய்கிறான் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் எமில் நகரில் ஜிம்ரோன் என்ற கிராமத்தில் அன்ரனி பெனான்றோ நிதர்சினி தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக பிறந்துள்ளான் அன்றியோனோ. 

அண்மையில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு பெற்றோர் கூட்டிச் சென்ற போது சளி அதிகமாக இருக்கின்றதென கூறிய வைத்தியர்கள் எக்ரே எடுத்து பார்த்த போதே இதயம் வலது பக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
அன்றியோனோவுக்கு இதயம் மட்டுமல்ல ஏனைய சில உறுப்புக்களும் பக்கம் மாறித்தான் இருக்கின்றது.

வயிறும் இடது பக்கமாகவே அன்றியோனோக்கு அமைந்துள்ளது. ஈரல் வல்லோருக்கும் வலது பக்கமாக இருக்கும் ஆனால் அன்றியோனோவுக்கு இடது பக்கமாக உள்ளது.

வலது பக்கமாக இருக்க வேண்டிய பித்தப்பை அன்றியோனோக்கு இடது பக்கமாக உள்ளது. நுரையீரல் கூட இடம் மாறியிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் அன்றியோனோ பரிசோதித்த வைத்தியர்கள் இது ஆச்சரியமான விடயம் என்கின்றனர்.

பயப்பிட தேவையில்லை வளர்ந்து வரும் மருத்துவ உலகில் இதனை எதிர்கொள்ள முடியுமென மன்னார் மாவட்ட வைத்தியசாலையிப் பணியாற்றும் வைத்திய கலாநிதி யு.என். அன்சலா மற்றும் மார்பு நோய் கிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி சமிந்த ஆகியோர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்