Breaking News

தற்கொலை அங்கி தொடர்பாக மேலும் ஐவர் கைது!

யாழ்ப்­பாணம், சாவ­கச்­சேரி மற­வன்­பு­லவு பகு­தியிலுள்ள வீடொன்­றி­லி­ருந்து தற்­கொலை அங்கி கண்­டெ­டுக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் மேலும் 5 சந்­தேகநபர்கள் விசா­ர­ணை­க­ளுக்­காக  பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்பட்­டுள்­ள­தாக  பொலிஸார் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

தற்­கொலைத் தாக்­குதல் அங்­கியை மறைத்து வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள பிர­தான சந்­தேக நப­ரான எட்வர்ட் ஜூலி­ய­ஸுடன் நெருக்­க­மான தொடர்­பு­களை வைத்­தி­ருந்த 5 பேரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக அந்த தக­வல்கள் தெரி­வித்­தன.

இவ்­வாறு ஸ்ரீலங்கா பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்­பட்­டுள்ள 5 பேரும் வவு­னியா, கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம், நெல்­லி­யடி, சாவ­கச்­சேரி பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்கள் என தெரிவிக்க்ளப்பட்டுள்ளது.

இவர்கள் 5 பேரும் பிர­தான சந்­தேக நப­ருடன் அடிக்­கடி தொலை­பேசி உரை­யா­டல்­களை மேற்­கொண்டு வந்­துள்­ளமை தொலை­பேசி வலை­ய­மைப்பு சோத­னை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.இந் நிலையில் பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் ஐவர் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

முன்­ன­தாக பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தின் கீழ் கைதுசெய்­யப்பட்­டுள்ள பிர­தான சந்­தேகநப­ரான எட்வர்ட் ஜூலியஸ் தொடர்பில் ஸ்ரீலங்கா பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்யசர் நாலக சில்வாவின் கீழ் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.