Breaking News

புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட புலிகளின் தொப்பி கொழும்பில் மீட்பு!

புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட புலிகளின் தொப்பி ஒன்று கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் விரைவு அஞ்சல் பணியகம் (கொரியர் சேர்விஸ்) ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.


குறித்த தொப்பி அடங்கிய பொதியை நேற்றைய தினம் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பொதியில் ரின் மீன், ஆடைகள் மற்றும் குறித்த புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பொதி வவுனியாவில் இருந்து மோதரைக்கு வந்துள்ளதாகவும், ஆனால் அந்தப் பொதியில் எந்தவிதமான பதிவு இலக்கங்களும் இல்லாத காரணத்தினால் நாரஹேன்பிட்டியில் உள்ள தலைமை காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.

குறித்த பொதியில் பதிவு இலக்கங்கள் காணப்படாத காரணத்தினால் அப் பொதியை தலைமை காரியாலய அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்வையிட்டுள்ளனர்.

இதன்போதே குறித்த பொருட்களுடன் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை கண்டு நாரஹேன்பிட்டி பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பொருட்களை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.