பனாமா ஆவணத்தில் இலங்கையின் முக்கிய அரசியல் புள்ளிகள்
சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா ஆவணங்கள்’ என்றபெயரில் வெளியிட்டுள்ள தகவல்களில் இலங்கையைச் சேர்ந்த முக்கிய அரசியல்புள்ளிகளும் இருக்கின்றார்கள் என பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கதெரிவித்தார்.
குறித்த அந்த புள்ளிகள் யார் என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் வெளிச்சத்துக்குவரும் என்றும் அவர் மேலும் கூறினார்.
சிறிக்கொத்த ஐ.தே.க. தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்களின் கணக்கில் வராத சொத்துகளை மத்திய அமெரிக்க நாடான பனாமா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் இரகசியமாக தொழில்களில் முதலீடு செய்து இருப்பதாகவும், வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் நேற்று முன்தினம் (04) பரபரப்பு தகவல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.