Breaking News

வேறு மே தினக் கூட்டத்துக்கு சென்றால் கடும் நடவடிக்கை -மஹிந்த

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் தவிர்ந்த வேறு மே தினக்கூட்டங்களில், கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டால், அவர்களுக்கு எதிராககடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கட்சியின் மே தினக் கூட்டம் காலி நகரில் நடைபெறவுள்ளதாகவும் இதற்காக கட்சிஉறுப்பினர்கள் சகலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், கூட்டணியுடன் உள்ள சகல அமைப்புக்கள், கட்சிகளுக்கும் இந்த மே தின கூட்டத்துக்கு வருமாறுஅழைப்புவிடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.