உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள சில பிரதேசங்களை விடுவிக்க இராணுவம் சம்மதம்
வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் ஒட்டகப்புலம், வறுத்தலைவிளான் பிரதேசங்களை முழுமையாகவும் காங்கேசன்துறையில் சில பகுதிகளையும் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு விடுவிக்க இராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது.
இப்பகுதிகளை விடுவிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தப் பணிகள் முடிவடைந்ததும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகும் என தெல்லிப்பழை பிரதேச செயலக வட்டாட தகவல்கள் தெரிவித்தன.
மேலும் கடந்த வாரம் #காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியினை அண்மித்த பகுதிகள் குறிப்பாக நடேஸ்வராக் கனிஸ்ர வித்தியாலையத்தின் பின்புறத்தில் இருந்து இராணுவத்தின் தல்சவென ஹொட்டல்
வரையிலான சில பகுதிகள் விடுவிப்பதற்கு படைத்தரப்பினர் இணக்கம் தெரிவித்ததாக கடந்த வாரம் செய்தி வெளியாகியிருந்தது.
மைத்திரி அரசு பதவியேற்ற பின்னர் உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரின் வசமிருந்த பெருமளவு நிலங்கள் பகுதிபகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 12 ஆம் திகதி 109 ஏக்கர் காணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.