மெக்ஸ்வெல் பரணகமவின் அறிக்கை ஜூலையில் ஜனாதிபதியிடம் கையளிப்பு
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த மெக்ஸ்வெல் பரணகமவின் ஆணைக்குழு, தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.
இந்த ஆணைக்குழு, யாழ்ப்பாணம் முதல் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, மற்றும் மன்னார் பிரதேசங்களில் சுமார் 7ஆயிரம் பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.
திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வாக்குமூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இந்த நடவடிக்கை பெரும்பாலும் மே அல்லது ஜூனில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்தே அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.