Breaking News

யாழ் சென்ற நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள்!

இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசினது, இந்திய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்த அக்னி சுப்பிரமணியம் யாழ்ப்பாணம் வந்து திரும்பியுள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள கேபியின் உத்தியோகபூர்வ வாசல் ஸ்தலத்தில் தங்கியிருந்த அக்னி சுப்பிரமணியம் நேற்றைய தினம் புதன்கிழமை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்திருந்தார். குறித்த சந்திப்பின்போது வட மாகாண சபையின் உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினமும் உடனிருந்துள்ளார்.