Breaking News

பனாமா ஆவணத்தில் மஹிந்தவின் பெயர் ?



பனாமா ஆவணத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரும் நிச்சயம் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டுமென புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

நிதிச் சலவையில் ஈடுபட்டதாக இலங்கையின் மூன்று நிறுவனங்கள் மற்றும் 22 தனிப்பட்ட நபர்கள் பற்றிய விரபங்கள் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊழல் ஒழிப்பு அமைப்பின் ஆலோசகர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மஹிந்தவின் பெயர் இந்த ஆவணத்தில் நிச்சயம் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டுமென கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.