Breaking News

மனித உரிமைகள் ஆணையாளரிடம் அவசர மகஜர் கையளிப்பு

இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பிரபல 17 கொலைகள் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு வெளிநாட்டிலுள்ள இலங்கை இணக்கப்பாட்டு அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் ராட் அல் ஹுசேன்ஸனிடம் அவசர மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது.

முல்லிப்பொத்தான, அனுராதபுரம், காத்தான்குடி, கோனகல, மஹதிவுல்வெவ, சேறுநுவர, கொடல்லபள்ளிய, கொடல்ல, வில்பத்து, மத்திய வங்கி தாக்குதல், புறக்கோட்டை பஸ் தரிப்பிடம், மொரட்டுவ பஸ் தரிப்பிடம், தெஹிவளை ரயில் நிலைய குண்டுவெடிப்பு, உலக வர்த்தக மைய தாக்குதல் மற்றும் கட்டுநாயக்க தாக்குதல் போன்ற சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் குறித்து அந்த மகஜரில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தொடர்பான ஜெனீவா விசாரணைக் குழுவின் அறிக்கையில் இது பற்றிய எந்தவொரு விடயம் குறித்தும் கருத்தில் கொள்ளப்படவில்லையெனவும் குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.