மீள்குடியேற்றத்தின் பின்னர் அபிவிருத்தியை ஏற்படுத்தவும் - வடக்கு முதல்வர்
பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் அபிவிருத்திக்கு முன்னர், குறித்த பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமென தாம் தெரிவித்ததாகவும், ஆனால் தாம் விமான நிலைய விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியதாகவும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழிலுள்ள தமது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பலாலி மற்றும் அதனை அண்டிய பகுதிகள் விவசாயத்திற்கு உகந்த பிரதேசமாக காணப்படும் நிலையில், குறித்த பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், முதலில் மீளகுடியேற்றம் செய்யப்பட்டதன் பின்னரே பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்குமாறு கோரினேன்.
மீள்குடியேற்றத்தின் பின்னர் எந்தவிதமான அபிவிருத்தியையும் மேற்கொள்ளலாமென தெரிவித்த வடக்கு முதல்வர், பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு தானோ அல்லது வட மாகாண சபையோ எந்தவகையிலும் முட்டுக்கட்டையாக இருந்ததில்லையென குறிப்பிட்டுள்ளார்.