இலங்கைக்கு சர்வதேசம் உதவவேண்டும் - பிரித்தானியா
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய செயற்பாடுகளுக்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்டிக்குச் சென்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து மஹாநாயக்கர்களை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போருக்குப் பின்னரான செயற்பாடுகளை வரவேற்றுள்ள ஜேம்ஸ் டொரிஸ், போருக்கு பின்னரான மனிதாபிமான செயற்பாடுகளுக்கு பிரித்தானியா என்றும் ஒத்துழைப்பு வழங்குமென குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் இன, மத, பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்றித்து வாழக்கூடிய உரு சூழல் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் அஸ்கிரிய மஹாநாயக்கர் தெரிவித்துள்ளார்.