வார இறுதியில் நாடு திரும்புவார் ராஜித
சிங்கப்பூர் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னசவின் உடல் நிலை தேறி வருவதாகவும், அவர் விரைவில் நாடு திரும்புவார் என்றும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராஜித சேனாரத்னவின் இரத்தக்குழாய்களில் இரண்டு அடைப்புகள் கண்டறியப்பட்டதையடுத்து, சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மூன்று மணிநேரம் இடம்பெற்ற இந்த சத்திரசிகிச்சையின் பின்னர், ராஜித சேனாரத்னவின் உடல்நிலை தேறி வருகிறது.இதையடுத்து, முன்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த அவர், நேற்று சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ராஜித சேனாரத்ன இந்த வார இறுதியில் நாடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.