Breaking News

மனோகணேசனே என் அமைதியைக் கெடுத்தவர்: விக்னேஸ்வரன

நல்லதொரு சூழலில் அமைதியான முறையில் எனது இளைப்பாறல் காலத்தைக் கழித்துகொண்டு இருந்த என்னை அரசியலுக்கு அழைத்து என் அமைதியை கெடுத்தவர்

அமைச்சர் மனோகணேசன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி பழைய மாணவர்களால் அமைக்கப்படவுள்ள மாணவர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா(வெள்ளிக்கிழமை) காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நான் நல்லதொரு சூழலில் அமைதியான முறையில் எனது இளைப்பாறல் காலத்தைக் கழித்து வந்திருந்தேன். அதில் மண் அள்ளிக் கொட்டக் காரணமாயிருந்தவர்களில் ஒருவர் நண்பர் மனோகணேசன் அவர்கள். மற்றவர்கள் தனிப்பட்ட முறையில் வலிந்தழைத்தார்கள் என்றால் நண்பர் மனோகணேசன் அவர்கள் கூட்டம் வைத்தே என்னை அரசியலுக்கு அழைத்தார்.

என் அமைதியைக் கெடுத்துவிட்டு அவர் இப்பொழுது அமைச்சராகி விட்டார்! அவர்களை இன்முகத்துடன் இச் சந்தர்ப்பத்தில் இங்கு வரவேற்கலாம் என்று எண்ணியிருந்தேன். ஏனோ இன்னமும் அவர் வரவில்லை. அரசியலில் வல்லவர்களுடன் நல்லவர்களும் உள்ளிட வேண்டும். வல்லவர்கள் பலர் சுயநலவாதிகள். நல்லவர்கள் பொதுநல சிந்தனை படைத்தவர்கள். திரு.அருந்தவபாலன் அவர்கள் பொதுநல சிந்தனை படைத்த வல்லவராவார். எனவும் தெரிவித்துள்ளார்.