Breaking News

அரசிற்கு கூட்டமைப்பு ஆதரவழித்தமை தவறு - சுரேஸ்

நல்லாட்சி அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவித முன்நிபந்தனைகளும் இன்றி ஆதரவழித்தமை தவறு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவித நிபந்தனையும் இன்றி ஜனாதிபதி வேட்பாளர் மைதிரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கியது.

அதனை தொடரடந்து நாடாளுமன்ற தேர்தலின் போதும் அதற்கு பின்னரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையிலும், தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு முன்நிபந்தனைகளும் இன்றி ஆதரவழித்தமை தவறு எனத் தெரிவித்த சுரேஸ் பிரேமசந்திரன், இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் தாம் வலியுறுத்திய போதும் அவர் அதனை நிராகரித்தாக குறிப்பிட்டார்.