சாவக்கச்சேரியில் மீட்ட வெடிபொருட்கள் குறித்து ஜீ.எல். கேள்வி
சாவகச்சேரி பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள், கொழும்பு வெள்ளவத்தைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததா? என அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி கோரியுள்ளது.
கொழும்பில் இன்று(30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு சகல விபரங்களும் கண்டறியப்பட வேண்டும்.
இந்த சம்பவத்தை சாதாரண விடயமாக கருத முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.