Breaking News

இலங்கை மக்களின் நோக்கம் வரவேற்கப்பட வேண்டியதாகும் – அமெரிக்க தூதுவர்



இலங்கை மக்களின் நோக்கம் வரவேற்கப்பட வேண்டியதாகும் என அமெரிக்க தூதுவர் அதுல் கேசப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி ஆகிய தினங்களில் நடைபெற்ற தேர்தல்களின் போது மக்கள் நோக்கங்களின் அடிப்படையில் வாக்களித்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும், சமாதானம், ஐக்கியம், சுபீட்சம் மற்றும் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்ற மக்களின் நோக்கம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் தீர்மானத்தை மதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.